லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூரை சேர்ந்தவர் கேசவன் மகன் அஜித்குமார், 26. டிரைவர். நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் நோக்கி சென்றபோது, பள்ளிப்பட்டு அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் அஜித்குமார் அதே இடத்தில் இறந்தார்.

இது குறித்து லாரி டிரைவர் மாணிக்கநாச்சியார்கோவில் செல்வம் மகன் பிரதீப் ராஜ், 26, என்பவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement