காங்., நிர்வாகி மீது நடவடிக்கை கவுன்சிலர் போலீசில் புகார்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி 8வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த இக்பால். அவரது வார்டுக்குட்பட்ட கருமார தெருவில் புதியதாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியின்போது, அப்பகுதியை சேர்ந்த காங்., நகர செயலாளர் பாரூக் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது இக்பாலை, பாரூக் தாக்கினார்.

இதுகுறித்து இக்பால் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பினர்.

இந்நிலையில், இக்பால் பற்றி அநாகரீமாக பாரூக் பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

தன்னை தவறாக பேசிய பாரூக் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லிக்குப்பம் போலீசில் இக்பால் புகார் அளித்தார்.

அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement