வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

கடலுார்: வடலுார் ஏரியில் மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வடலுார் வெங்கட்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பிரபாகரன்,26. மெக்கானிக். இவர் நேற்று காலை வடலுார் அய்யன் ஏரியில் உள்ள ஒருமரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

தகவலின் பேரில், வடலுார் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement