மைசூரு - வாரணாசி ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

மைசூரு: கும்ப மேளாவில், மைசூரு பக்தர்கள் பங்கேற்கும் வகையில், மைசூரு - வாரணாசி விரைவு ரயிலில், கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகத்துக்கு, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், '144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளாவுக்கு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இத்தகைய காலகட்டத்தில், புனித நீராட பலரும் விரும்புகின்றனர்.

'மைசூரு மக்கள் பயன்பெறும் வகையில், மைசூரு - வாரணாசி விரைவு ரயில், பிரயாக்ராஜ் வழியாக செல்கிறது. இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்தால், மைசூரு பக்தர்கள் பயனடைவர்' என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ரயில்வே அமைச்சகம், இன்று முதல் மைசூரு - வாரணாசி ரயிலில் ஒரு குளிரூட்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்' என பதிலளித்துள்ளதாக எம்.பி., யதுவீர் தெரிவித்துள்ளார்.

Advertisement