போலி சிகரெட் விற்றவர் கைது
பெங்களூரு: போலி சிகரெட்டுகளை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடைகளில் போலி சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பிரபல சிகரெட் நிர்வாகத்தினர், வில்சன் கார்டன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலி சிகரெட்களை கடைகளுக்கு சப்ளை செய்த கேரளாவை சேர்ந்த யூசுப், 32, என்பவரை அடையாளம் கண்டனர்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் போலி சிகரெட்டுகளை வினியோகிக்க வந்தபோது, யூசுப்பை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். ஜூஸ் பாட்டில் பெட்டிகளுக்குள், போலி சிகரெட்டை எடுத்து வந்தது தெரிந்தது.
அவர் கொடுத்த தகவலின்பேரில் சோதனை நடத்தி, 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. யூசுப் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.