அண்ணாதுரை நினைவு நாள்

தங்கவயல்: தங்கவயலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர், அண்ணாதுரை நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

ராபர்ட்சன்பேட்டை பிரிட்சர்ட் சாலையில் உள்ள தி.மு.க., பணிமனையில் அண்ணா துரை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அவரின் மொழிப்பற்று, ஆட்சி திறன், சமூக நலன், குறித்து தி.மு.க., பிரமுகர்கள் புகழாரம் சூட்டினர். கு.ஆதித்தன், சு.கலையரசன், கு.அறிவழகன், ஸ்ரீதர், குலோத்துங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க.,



ராபர்ட்சன் பேட்டை ஆர்.கே.மார்க்கெட் பகுதியில் தங்கவயல் தொகுதி செயலர் பொன் சந்திரசேகர், வக்கீல் ஜெகநாதன், வி.சி.நடராஜ், ராஜசேகர், ஆல்பர்ட், லோகநாதன், வேணு ஆகியோர் அண்ணா துரை உருவப்படத்திற்கு மலர் துாவினர்.

“அண்ணா துரையை யாருமே மறக்கக் கூடாது என்பதற்காகத் தான் கட்சியின் பெயரிலும், கொடியிலும் அண்ணாதுரையை எம்.ஜி.ஆர்., வைத்தார்,'' என, பொன் சந்திரசேகர் தெரிவித்தார்.

Advertisement