உயிர் போராட்டத்தில் பசியை மறந்தது புலி; பகையை மறந்தது காட்டுப்பன்றி; ம.பி.,யில் நடந்த சம்பவம்

5


போபால்: ம.பி.,யில் காட்டுப்பன்றியும், அதனை உணவுக்காக துரத்தி வந்த புலியும் கிணற்றுக்குள் விழுந்தன. இயற்கையிலேயே எதிரிகளான இந்த இரண்டும், கிணற்றுக்குள் சண்டையிடாமல் அருகருகே அமைதியாக இருந்தது வன ஆர்வலர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ம.பி., மாநிலம் பெஞ்ச் புலிகள் காப்பகம் அருகே பிபாரியா கிராமம் உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி ஒன்றை, புலி உணவுக்காக துரத்தி வந்தது. ஆனால் அந்த காட்டுப்பன்றி புலியிடம் சிக்காமல் இருக்க கிராமத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கிணற்றில் விழுந்தது. இதனை துரத்தி வந்த புலியும் கிணற்றுக்குள்ளேயே விழுந்தது.

ஆனால், இரைக்காக துரத்தி வந்த காட்டுப்பன்றி அருகில் இருந்தும், கிணற்றுக்குள் விழுந்து விட்டதால் புலி அமைதியாக இருந்தது. பக்கத்தில் இருந்த காட்டுப்பன்றியை ஒன்றும் செய்யவில்லை.
காட்டு விலங்குகள் கிணற்றுக்குள் இருப்பதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் கூண்டுகளை உள்ளே விட்டனர். அப்போதும், கூண்டு மற்றும் புலியை காட்டுப்பன்றி சுற்றி வந்தது. அதனை புலி கண்டு கொள்ளவில்லை.
பிறகு கூண்டில் வைத்து புலியையும், மரக்கட்டில் வைத்து காட்டுப்பன்றியும் மீட்கப்பட்ட வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் விட்டனர். புலியின் செயல் வனத்துறையினர் மற்றும் விலங்கின ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement