காலிறுதியில் தியா-மனுஷ் ஜோடி * சிங்கப்பூர் டேபிள் டென்னிசில்...

சிங்கப்பூர்: 'சிங்கப்பூர் ஸ்மாஷ்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-8', இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட்டாலே ஜோடி, மெக்சிகோவின் அரான்ட்சா, மார்கஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் இரு செட்டை 11-4, 11-5 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 5-11 என கோட்டை விட்டது. பின் சுதாரித்த இந்திய ஜோடி நான்காவது செட்டை 11-7 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஆயிஹா, சுதிர்த்தா ஜோடி 1-3 என (11-7, 6-11, 9-11, 7-11) தாய்லாந்தின் சுதாசினி, ஆரவன் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
மணிகா 'ஷாக்'
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, 1-3 என (10-12, 11-7, 10-12, 7-11) ருமேனியாவின் எலிசபெத்தாவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, 2-3 என (5-11, 12-10, 11-9, 8-11, 11-13) சீனாவின் ஜோவோஜியாவிடம் தோற்றார்.

Advertisement