எலான் மஸ்க் குழுவில் இந்திய வம்சாவளி பொறியாளர்

4

வாஷிங்டன்: எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டு துறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆகாஷ் போப்பா என்ற இளம் பொறியாளர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அமெரிக்கா அரசின் திறன் துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது இந்த குழுவில் ஆறு பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில், அவர்களின் வயது 19 முதல் 24 வரை மட்டுமே உள்ளது. இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆகாஷ்போபா(22) என்பவரும் ஒருவர் ஆவார்.

இவர்கள், தனிநபர் மேலாண்மை அலுவலகம்(ஓபிஎம்), பொது சேவை நிர்வாகம் ஆகிய துறைகளில் முக்கிய பணியாற்றி, அரசின் முக்கியமான தகவல்களை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆகாஷ் போப்பாவுக்கு ஓபிஏ பிரிவில் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவருக்கு அரசின் இமெயில், அலுவலக அறை, ஐடி அமைப்புள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.

கலிபோர்னியா பல்கலையில் நிர்வாகம், தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆகாஷ் போப்பா பட்டம் பெற்றவர். ஆவார். அங்கு அவர் எதிர்காலத்தின் இளம் தலைவராக உருவானார்.

இதற்கு முன்னர் மெட்டா, பாலன்டிர், பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற இவர், செயற்கை நுண்ணறிவு, தகவல் மேலாண்மை மற்றும் நிதி நிர்வாகம் ஆகியதுறை சார்ந்த பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில், வழக்கமான பாதுகாப்பு ஒப்புதல் வழிமுறைகளை மீறி இவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement