தி.நகர் பெருமாள் கோவிலை சுற்றி 70 கடைகள் அகற்றம்
தி.நகர், தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஏழுமலையான் கோவில் உள்ளது. இங்கு, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால், கோவிலையொட்டி உள்ள தெருக்கள் மற்றும் நடைபாதையில், பூ மற்றும் மாலை கடைகள், தள்ளுவண்டி கடைகள் அதிகரித்துள்ளன.
இதில், கோவிலுக்கு எதிரே உள்ள பகவந்தன் தெருவில், 40 பூக்கடைகளும், 20 பூ மாலை கடைகளும் இருந்தன. இதனால், அத்தெருவில் நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல், வெங்கட் நாராயணா சாலை மற்றும் கண்ணதாசன் தெருவிலும், தள்ளுவண்டி கடைகள், பூக்கடைகள் உள்ளிட்டவை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர் இனியன், உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள், இச்சாலைகளில் இருந்த 70க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement