கேரள மாவோயிஸ்ட் வழக்கு மார்ச் 3க்கு ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவரின் அடையாள அட்டை ஜெராக்ஸை 2016ல் போலி முகவரி சான்றாக கொடுத்து சிம்கார்டு வாங்கியதாக கேரளாவைச் சேர்ந்த சைனி, அனுப் மேத்யூ ஜார்ஜ் ஆகியோர் மீது சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். பின்னர் இந்த வழக்கு கியூ பிரிவு போலீசிற்கு மாற்றப்பட்டு தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இருவரும் ஆஜராகவில்லை. லீவ் பெட்டிஷன் தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து வழக்கின் விசாரணையை மார்ச் 3க்கு நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.

Advertisement