போலீஸ் கொலை மைத்துனர் சரண்

திருமங்கலம்: எழுமலை அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் போலீஸ்காரர் சிவா 32. நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தார். இவரது முதல் மனைவி 2017 ல் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு மகன் உள்ள நிலையில் சமீபத்தில் ரஞ்சிதா என்பவரை சிவா திருமணம் செய்து கொண்டார். மகனை முதல் மனைவி வீட்டில் இருந்து அழைத்து வந்து படிக்க வைத்ததால் மைத்துனர் அர்ஜூனன் கோபமடைந்தார்.

2 நாட்களுக்கு முன்பு பாப்பநாயக்கன்பட்டியில் விசேஷ வீட்டிற்கு சென்றுவிட்டு ரஞ்சிதாவுடன் டூவீலரில் வந்த சிவாவை அர்ஜூனன் கத்தியால் குத்தி கொலை செய்தார். தலைமறைவாக இருந்த அர்ஜூன் திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் முன்னிலையில் சரணடைந்தார். 'ரிமாண்ட்' செய்யப்பட்டார்.

Advertisement