அரிசியில் வண்டு: விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'

திருநெல்வேலி:பத்தமடை ரேஷன் கடையில் விநியோகிக்கப்பட்ட அரிசியில் வண்டுகள் இருந்தது குறித்து பெண் புகார் அளித்ததால் விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பேரூராட்சி பகுதி 1 ரேஷன் கடையில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட அரிசியில் வண்டுகள் இருந்தன.

மாரியம்மாள் என்பவர் இது குறித்து புகார் அளித்தார். அந்த வீடியோ வெளியானது. இதனையடுத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ரேஷன் கடையில் ஒரு மூடையில் மட்டும் வண்டுகள் இருந்ததும் தவறுதலாக அந்த பெண்ணுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதனை கண்டு கொள்ளாமல் அரிசி வழங்கிய விற்பனையாளர் சங்கரலிங்கம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Advertisement