வணிகர் சம்மேளன ஆலோசனை கூட்டம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் ஆலோசனை , புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நடந்தது.
தலைவர் தமிழ்செல்வம் தலைமை வகித்தார். மாநில ஆலோசணைக்குழு தலைவர் அப்துல் கனிராஜா முன்னிலை வகித்தார்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, எக்ஸ்போர்ட் கமிட்டி செயலர் சதிஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் பங்கேற்றனர். கொரோனா கால கட்டத்தில் அரசுத்துறை வாடகை கடைகளுக்கு கட்டண தவிர்ப்பு, பாரபட்ச நிலை கடைபிடிக்க வேண்டும்.
சிறுகுறு வணிகர்கள் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கும் நடைமுறை வழக்கம் போல் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். தன்னிச்சையாக அபராதம் விதித்து வணிகர்கள் பாதிக்கும் நிகழ்வை கைவிட வேண்டும்.
தீர்வு இல்லாத நிலையில் போராட்டம் நடத்தப்படும். வால்பாறை சுற்றுப்புற சூழல் திட்டத்தில் 36 கிராமம் பாதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.