போலீஸ் செய்திகள்...

சிறுவன் பலி

மேலுார்: திண்டுக்கல் மாவட்டம் வேலாயுதம் பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி குமார். இவரது மகன் மோதிஷ் 4, இவர் குடும்பத்தினருடன் மேலுார், ஆலம்பட்டியில் கண்ணனுக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்தார். கோழிப்பண்ணைக்கு வெளியே சிறுவன் ரோட்டை கடக்க முயன்ற போது மேலுார் சென்ற கார் மோதியதில், சிறுவன் மோதிஷ் இறந்தார். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒருவர் பலி

கொட்டாம்பட்டி: குன்னங்குடிபட்டி பாண்டி 36, பந்தல் போடும் தொழில் செய்தார். நேற்று மாலை டூவீலரில் சொந்த ஊருக்குச் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. குன்னங்குடிபட்டி விலக்கில் 4 வழிச்சாலையை கடந்த போது பின்னால் வந்த மினி வேன் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement