தலைமைத்துவ பயிற்சி முகாம்
மதுரை: மேலுார் கல்வி மாவட்டம் சார்பில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான 2 நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் சுந்தராஜன்பட்டி ராமச்சந்திரா மிஷன் தியான மையத்தில் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா துவக்கி வைத்தார். உறங்கான்பட்டி தலைமை ஆசிரியர் அருணாச்சலம், மேலுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அமலி மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாநில பயிற்றுனர்களாக ரவிச்சந்திரன், சந்திரநாதன் மேற்பார்வையில் பயிற்சி பெற்றனர். விபத்தில்லா மதுரை, போதையில்லா தமிழகம் உருவாக்கிடவும், பேரிடர் நேரத்தில் மக்களுக்கான தொண்டு குறித்தும் இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார் பயிற்சி அளித்தார்.
நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, மதிய உணவு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் செய்திருந்தார்.