சந்து மாரியம்மன் திருவிழா
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் பூஞ்சோலை, நாயக்கர் தெரு, பாரதி நகர் உள்பட பல்வேறு இடங்களில், பாரம்பரிய சந்து மாரியம்மன் கோவில் விழா நடந்தது.
சாட்டுதலுடன் துவங்கிய விழாவில் நேற்று அம்மன் அழைப்பு நடந்தது. மேளதாளத்துடன் கரியன்குளக்கரை கருமாரியம்மன் கோயில், சிவசுப்பிரமணியர் கோயில், பிருந்தாவனத்தோப்பு உள்ளிட்ட இடங்களில் கரகம் பாலித்தல் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கரகம், முக்கிய தெருக்களில் ஊர்வலம் நடந்தது. மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement