மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

வேடசந்துார்: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து வேடசந்துார் ஆத்துமேட்டில் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேடசந்துார் ஒன்றிய குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட குழு உறுப்பினர் பாலச்சந்திர போஸ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார், கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, சவடமுத்து, செல்வம், நாகேஷ், வேலுச்சாமி பங்கேற்றனர்.

ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு., ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி, மாவட்ட குழு உறுப்பினர் சிவமணி, ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர்.

Advertisement