போலீஸ் செய்திகள்....

விபத்தில் 11 பேர் காயம்

வடமதுரை: திருச்சி துவாக்குடியிலிருந்து பழநிக்கு ஒரு குடும்பத்தினர் சென்ற ஆட்டோ நேற்று அதிகாலை அய்யலுார் மேம்பாலத்தில் வந்தபோது, பின்னால் திண்டிவனத்திலிருந்து பழநி சென்ற கார் மோதியது. ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்து டிரைவர் சிதம்பரம் 47, அவரது மனைவி நித்யா 34, மகள் கார்த்திகா 16, உறவினர் ஆனந்தி உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

மற்றொரு விபத்தில் கடலுார் மாவட்டம் திட்டக்குடி தொழுதுாரை சேர்ந்தவர்கள் பழநியிலிருந்து காரில் நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பியபோது அய்யலுார் பாச்சாநாயக்கனுார் பகுதியில் டிரைவர் பாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மைய தடுப்பில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் பாரதி 23, கலையரசி 45, பரமசிவம் 40, இரு சிறுவர்கள் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் மீது தாக்குதல்

வடமதுரை: தங்கம்மாபட்டி புதுவாடி புதுாரை சேர்ந்த தீபலட்சுமி 30, வடமதுரை மூனாண்டிபட்டி நுாற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்தார். உடல்நிலை சரியில்லாமல் இரு நாட்கள் வேலைக்கு செல்லாமல் இருந்துவிட்டு மீண்டும் சென்றபோது, மேலாளர் பாண்டி 34, சூப்பர்வைசர் மகுடீஸ்வரி 27 ஆகியோர் அசிங்கமாக பேசி தள்ளிவிட்டனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

விவசாயி பலி

எரியோடு: கோவிலுார் வாத்தியார்புதூரை சேர்ந்த விவசாயி ராஜூ 70. குஜிலியம்பாறை திண்டுக்கல் ரோட்டில் செல்லக்குட்டியூர் பிரிவு அருகே நேற்று காலை டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) சென்றபோது அவ்வழியே வந்த கார் மோதி இறந்தார். வழிப்பறி செய்தவர்கள் கைது

குஜிலியம்பாறை:கரூர் ஈசனநத்தம் வியாபாரி கிருஷ்ணன் 70, என்பவர் டூவீலரில் வந்தார். தாசல்நாயக்கனுார் வளைவு பகுதியில் கூம்பூர் எஸ்.புதுாரை சேர்ந்த தொழிலாளி சரவண மூர்த்தி 34,குஜிலியம்பாறை உல்லியகோட்டை கட்டட தொழிலாளி சக்திவேல் 38, இருவரும் கிருஷ்ணனை,தாக்கி பணம் பறிக்க முயன்றனர். குஜிலியம்பாறை எஸ்.ஐ., சக்திவேலை கைது செய்தார்.

Advertisement