கோயிலை மீட்ட பழநி தேவஸ்தானம்
பழநி: பழநி கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோயில் எதிரே வீரபத்திரர் கோயில் பல ஆண்டு காலமாக தனியார் கட்டுப்பாட்டில் பூட்டி கிடந்தது.
பொதுமக்கள் பலர் அதனை கல் மண்டபமாகவே நினைத்தனர். இந்நிலையில் பழநி முருகன் கோயில் நிர்வாகம் வீரபத்திரர் கோயிலை மீட்டு புனரமைத்து, கோயிலுக்கு பெயர் பலகை வைத்து பக்தர்களின் வழிபாட்டிற்கு திறந்து, அனுமதி அளித்தது. தற்போது மூன்று கால பூஜை நடக்கிறது. தினமும் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பூட்டிக் கிடந்த கோவிலை திறந்து பூஜைகளை பூஜைகள் நடந்து தரிசனம் செய்வதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement