பெராரி 12 சிலிண்டரீ 'வி - 12' கர்ஜனை; 2.9 வினாடியில் 100 கி.மீ., பிக்கப்

'பெராரி' நிறுவனம், '12சிலிண்டரீ' என்ற கிராண்ட் டூரர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இந்த காரின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு துவங்கி உள்ளது. வினியோகம், நடப்பாண்டு இரண்டாம் பாதியில் துவங்க உள்ளது.

'கிராண்ட் டூரர்' என்பது பெராரியின்சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.அதாவது, முன்புற வி - 12 என்.ஏ., இன்ஜின், ரியர் வீல் டிரைவ் அமைப்பு, நீண்ட துார பயணம் மேற்கொள்ள சொகுசான உட்புறம், அதிவேக திறன் ஆகியவை இந்த வகை பெராரி காரில் இருக்கும்.

இந்த கார், கூபே மற்றும் சாப்ட் ரூப் என இரு மாடல்களில் வர உள்ளது. 24 மணி நேர கார் ரேஸ்களில் பயன்படுத்தப்படும் பழங்கால ஸ்போர்ட்ஸ் காரான, 'பெராரி 365 ஜி.டி.பி., 4 டெடோனா' காரின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு, இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 6.5 லிட்டர், வி - 12 என்.ஏ., இன்ஜின் உள்ளது. 830 ஹெச்.பி., பவரையும், 678 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 100 கி.மீ., வேகத்தை வெறும் 2.9 வினாடியில் அடைகிறது.


உட்புறத்தில், மூன்று டிஸ்ப்ளே கொண்ட டேஷ் போர்டு, கேபின் முழுதும்சொகுசு பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அதன் அம்சங்கள் குறித்து வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த காருக்கு, 'ஆஸ்டன் மார்ட்டின் வேங்குவிஷ்' ஸ்போர்ட்ஸ் கார் போட்டியாக உள்ளது.


விலை: ரூ. 8.5 கோடி - 9.15 கோடி




விபரக்குறிப்பு



இன்ஜின்: 6.5 லிட்டர் வி - 12, என்ஏ., பெட்ரோல்

பவர்: 830 ஹெச்.பி.,

டார்க் - 678 என்.எம்.,

டாப் ஸ்பீடு - 340 கி.மீ.,

(0.100 கி.மீ.) பிக்கப் - 2.9 வினாடி

Advertisement