ஓலா 'எஸ் - 1' இ.வி., ஸ்கூட்டர் 320 கி.மீ., ரேஞ்ச், 141 கி.மீ., வேகம்

'ஓலா' நிறுவனம், அதன் மூன்றாம் தலைமுறை 'எஸ் - 1' மின்சார ஸ்கூட்டர் அணிவகுப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியாவில் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார ஸ்கூட்டர் ஆகும்.

இந்த 'எஸ் - 1' ஸ்கூட்டர் அணிவகுப்பில், எஸ் - 1 எக்ஸ், எஸ் - 1 எக்ஸ் பிளஸ், எஸ் - 1 ப்ரோ மற்றும் எஸ் - 1 ப்ரோ பிளஸ் என நான்கு வகையான ஸ்கூட்டர்கள் உள்ளன. இரண்டாம் தலைமுறை ஸ்கூட்டர்கள் குறைந்த விலையில் விற்பனையில் இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் தலைமுறை ஓலா ஸ்கூட்டர்களில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்கூட்டர்களின் செயல்திறனை அதிகரிக்க, ஹப் மோட்டாருக்கு பதிலாக செயின் டிரைவ் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, எலக்ட்ரானிக் பிரேக்கிங் அமைப்பு, புதிய மூவ் ஓ.எஸ்., 5 மென்பொருள், ஸ்மார்ட்போன் போல லாக் செய்யும் வசதி, ஓலா உற்பத்தி செய்யும் புதிய 4680 பேட்டரி செல்கள் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

எஸ் - 1 ஸ்கூட்டர் வகையை பொறுத்து, 2 கி.வாட்.ஹார்., முதல் 5.3 கி.வாட்.ஹார்., திறன் வரை பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. இதன் ரேஞ்ச், 242 கி.மீ., முதல் 320 கி.மீ., வரையிலும், டாப் ஸ்பீடு 125 முதல் 141 கி.மீ., வரையிலும் வழங்குவதாக கூறப்படுகிறது. வகையை பொறுத்து மோட்டார் பவர் மாறுபடுகிறது.


விலை: ரூ.69,999 - ரூ. 1.15 லட்சம்

டீலர்: OLA Mount Road

போன்: 6382668798

விபரக்குறிப்பு





பேட்டரி: 5.3 கி.வாட்.ஹார்.,

மோட்டார் பவர்: 17.43 ஹெச்.பி.,

(0.40 கி.மீ.,) பிக்கப்: 2.7 வினாடி

டாப் ஸ்பீடு: 141 கி.மீ.,

ரேஞ்ச்: 320 கி.மீ.,



Advertisement