எப் - 77 சூப்பர் ஸ்ட்ரீட் அல்ட்ராஒய்லட்டின் இ.வி., 'ஸ்ட்ரீட் பைட்டர்'

'அல்ட்ராஒய்லட்' நிறுவனம், 'எப் - 77 சூப்பர் ஸ்ட்ரீட்' என்ற புதிய மாடல் மின்சார பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக், இரு வகையில் வருகிறது. இதன் முன்பதிவு ஆரம்பமாகி உள்ள நிலையில், வினியோகம் மார்ச் 1ம் தேதி முதல் துவங்குகிறது.

தற்போது சந்தையில் இருக்கும் 'எப் - 77 மேக் 2' பைக்குடன் ஒப்பிடுகையில், காற்றைக் கிழித்து வேகமாகச் செல்லும் வகையில், டிசைன் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. ஹேண்டில் பார் அகலமாகவும், உயரமாகவும் வழங்கப்பட்டுஉள்ளது. இதனால், இந்த பைக்கின் எடை 500 கிராம் அதிகரித்து,207 கிலோவாக உள்ளது. பேட்டரி மற்றும் மோட்டார் திறனில் எந்த மாற்றமும் இல்லை.

அம்சங்களைப் பொறுத்த வரை, மூன்று ரைட் மோடுகள், 10 ரீஜென் மோடுகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், மூன்று ஏ.பி.எஸ்., மோடுகள், டயரில் உள்ள காற்றை கண்காணிக்கும் டி.பி.எஸ்.எம்., அமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன.


விலை:

ரூ. 2.99 - ரூ.3.99 லட்சம்



டீலர்: Ultraviolette

போன்: 8925978800

விபரக்குறிப்பு



பேட்டரி: 10.3 கி.வாட்.ஹார்.,

மோட்டார் பவர்: 40.2 ஹெச்.பி.,

டார்க்: 100 என்.எம்.,

ரேஞ்ச்: 323 கி.மீ.,

டாப் ஸ்பீடு: 155 கி.மீ.,

(0.100 கி.மீ.,) பிக்கப்: 7.5 வினாடி



Advertisement