தெலுங்கானாவில் சுவர் இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 3 பேர் பரிதாப பலி


ஹைதராபாத்: தெலுங்கானாவில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் எல்.பி நகர் சந்திரபுரிகாலனி அருகே கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் தொழிலாளர்கள் 3 பேர் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டனர்.

மேலும் தொழிலாளி ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் விசாரணையில் உயிரிழந்தவர்கள் வீரையா (52), ராமு (22), மற்றும் வாசு (19) என தெரியவந்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement