பட்டாசு ஆலையில் விபத்து: கட்டடங்கள் தரைமட்டம்

விருதுநகர்: விருதுநகர் கோயில் புலிகுத்தி அருகே சின்னவாடியில் சத்திய பிரபு பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு இன்று மதியம் திடீரென விபத்து ஏற்பட்டது. அதில் கட்டடங்கள் தரைமட்டமாகின. ஏழு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உள்ளே தொழிலாளர்கள் சிக்க உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த ஆலையில் இருந்து எழும்பிய புகை வானை முட்டும் அளவுக்கு இருந்தது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

உரிமம் ரத்து
இந்த விபத்தைத் தொடர்ந்து பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement