விருதுநகர் அருகே தரைமட்டமான பட்டாசு ஆலை: பெண் பலி: 7 பேர் படுகாயம்
விருதுநகர்: விருதுநகர் கோயில் புலிகுத்தி அருகே சின்னவாடி சத்திய பிரபு பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.கட்டடங்கள் தரைமட்டமாகின.
விருதுநகர் அருகே கோயில் புலிகுத்தி அருகே சின்னவாடியில் சத்திய பிரபு பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.இன்று காலையில் வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் திடீரென ஏற்பட்ட உராய்வினால் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
தீ எரிந்து புகை எழும்பியது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.விபத்து நடந்த ஆலையில் இருந்த ஐந்து அறைகள் தரைமட்டமாகின. பெண் ஒருவர் பலியானார். 7 பேர் காயமடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து (1)
Subramanian - ,
05 பிப்,2025 - 18:52 Report Abuse
கொடூரமான சம்பவம். இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதில் சம்பந்தபட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement