சாலையில் வேகத்தடை வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஓசூர: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மத்திகிரி கூட்ரோட்டில் இருந்து,
கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள டி.வி.எஸ்., கம்பெனிக்கு மாநில
நெடுஞ்சாலை செல்கிறது.
இச்சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, டிப்பர் லாரிகள், சரக்கு வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இச்சாலையிலுள்ள தனியார் பள்ளி அருகே, மிடுகரப்பள்ளி கிராமத்திற்கு செல்ல சாலை பிரிகிறது.
இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதில், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சாலையை கடக்க முயற்சி செய்யும் பொதுமக்களும் காயமடைந்து வருகின்றனர்.
மிடுகரப்பள்ளி செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியிலுள்ள யூ டர்னில் திரும்பும் போதுதான், விபத்து அதிகமாக நடக்கின்றன. தனியார் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் மற்றும் அப்பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு வரும் மக்கள், விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறை, மிடுகரப்பள்ளி பிரிவு சாலை அருகே, வேகத்தடை அமைக்க, வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மனித- வன விலங்கு மோதலில் 80 பேர் உயிரிழப்பு; 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்!
-
ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்
-
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு சாதகம்: நம்ப மறுக்கும் ஆம்ஆத்மி
-
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: முள்ளோடையில் பரபரப்பு
-
காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
-
சிதம்பரம் மருத்துவ கல்லுாரிக்கு 93 டாக்டர்கள் நியமனம்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்