காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 26; அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனசேகரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக காதலிக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவர், நெய்வேலி மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில், அந்த இளம்பெண் விஷம் மருந்து குடித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அதை தொடர்ந்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, இளம்பெண்ணை ஏமாற்றிய தனசேகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement