மாதாந்திர பராமரிப்பு பணி எனக்கூறி 10 நாள் இடைவெளியில் மீண்டும் மின்தடை
ஓசூர்: ஓசூர், மின் கோட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் மின்சாதன பராமரிப்பு பணிக்காக, அந்தந்த துணை மின்நிலையங்கள் மூலம் மின்தடை செய்யப்படும். கடந்த மாதம், 24ல், ஓசூர் மின்நகர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இம்மாதத்திற்கான பராமரிப்பு பணி எனக்கூறி மீண்டும் மின்தடை செய்யப்பட்டது. கடந்த மாதம் மின்தடை செய்யப்பட்டு, 10 நாட்கள் தான் ஆகியிருந்தது. ஆனால், அதற்குள் இம்மாதத்திற்கான மின்தடை நேற்று செய்யப்பட்டது. இதனால், குடியிருப்புவாசிகள் மற்றும் சிறு, குறுந்தொழிற்சாலை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம், 7ல், ஓசூர் துணை மின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிக்கு மின்தடை அறிவிக்கப்பட்டது. மீண்டும், 21ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி எனக்கூறி மின்தடை செய்தனர். மேலும், ஓசூர் சிப்காட் பேஸ், 2 துணை மின்நிலைய பகுதிகளில் அதிகளவில் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அங்கு கடந்த மாதம், 23ல் மின்தடை செய்த நிலையில், இம்மாதத்திற்கு இன்று (பிப்.6) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில்களை முடக்கும் நிலையை ஏற்படுத்துவதாக, தொழில் முனைவோர் புலம்பி வருகின்றனர்.
தனியாருக்கு மின் பணிகளை செய்து கொடுக்க, இதுபோன்று மாதாந்திர பராமரிப்பு பணி எனக்கூறி மின்தடை செய்வதாகவும், மின்தடை நேரங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் முறையாக நடப்பதில்லை எனவும், மக்கள் புலம்பி வருகின்றனர்.
இது குறித்து, ஓசூர் மின்வாரிய உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'இம்மாதத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்குகிறது. அப்போது மின்தடை செய்ய முடியாது. அதனால் செய்முறை தேர்வு துவங்கும் முன்பே, மின்சாதன பராமரிப்பு பணிகளை செய்து முடிக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வரும் மார்ச், ஏப்., மாதங்களில் தேர்வுகள் நடக்கும் என்பதால், மின்தடை செய்ய வேண்டாமென
அறிவுறுத்தி உள்ளனர்' என்றார்.
மேலும்
-
மனித- வன விலங்கு மோதலில் 80 பேர் உயிரிழப்பு; 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்!
-
ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்
-
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு சாதகம்: நம்ப மறுக்கும் ஆம்ஆத்மி
-
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: முள்ளோடையில் பரபரப்பு
-
காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
-
சிதம்பரம் மருத்துவ கல்லுாரிக்கு 93 டாக்டர்கள் நியமனம்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்