காவேரிப்பட்டணம் ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை நடத்த கோரிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., மாவட்ட அமைப்புசாரா
ஓட்டுனரணி மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தின், 36 கிராமங்களை சேர்ந்தவர்கள், காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அப்பகுதிகளில் விபத்து நடந்தால் அங்கேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் நடந்தன. மேலும், பிரேத பரிசோதனையும் அங்கேயே நடந்தது. கடந்த, 8 மாதங்களாக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடப்பதில்லை. இறந்தவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு போலுப்பள்ளியிலுள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களை கூட, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். இதனால், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இது குறித்து விசாரித்து காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில், மீண்டும், பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், தி.மு.க., பிரமுகர் சீனிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
மனித- வன விலங்கு மோதலில் 80 பேர் உயிரிழப்பு; 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்!
-
ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்
-
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு சாதகம்: நம்ப மறுக்கும் ஆம்ஆத்மி
-
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: முள்ளோடையில் பரபரப்பு
-
காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
-
சிதம்பரம் மருத்துவ கல்லுாரிக்கு 93 டாக்டர்கள் நியமனம்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்