ஐக்கிய விவசாயிகள் முன்னணி நகல் எரிப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமை வகித்தார்.
நகல் எரிப்பு போராட்டத்தில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்த பட்ச ஆதாரவிலை பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி இல்லை. உரங்களுக்கு மானியம் குறைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. ஒட்டுமொத்த விவசாயிகளையும், உழைக்கும் மக்களையும் வஞ்சிக்கக்கூடிய இந்த பட்ஜெட்டை கண்டித்ததோடு, அதன் நகலையும் எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.
இதில், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிவராஜ், சி.பி.ஐ., மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, மாநில குழு உறுப்பினர்கள் கண்ணு, ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ராஜி, நகர செயலாளர் உபேத், இந்திய ஜனநாயக வாலியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் முருகேசன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர்
அண்ணாமலை உள்பட பலர் பங்கேற்றனர்.