சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், 88ம் ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி நேற்று காலை,
முருகனுக்கு, கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை செய்து, கொடிமரத்திற்கு சிறப்பு
அபிஷேகத்துடன் பூஜை நடந்தது. தொடர்ந்து, கிருஷ்ணகிரி பழையபேட்டை பருவதராஜகுல மீனவ சமுதாயத்தினர், கொடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் அதற்கு பூஜை செய்து 'அரோகரா' கோஷத்துடன் கொடிக்
கம்பத்தில் ஏற்றப்பட்டது.
இதைதொடர்ந்து தினமும், மயில்வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடக்க உள்ளது. வரும், 9 மாலை, 6:00 மணிக்கு, முருகனுக்கு திருக்கல்யாணமும், யானை வாகனத்தில் ஊர்வலமும் நடக்க உள்ளது. 11ல் தைப்பூச திருவிழா நடக்க உள்ளது.
இதில், 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து, கேடய உற்சவம், குதிரை வாகனம், சயன
உற்சவம் ஆகியவை நடக்கிறது. இதில், புகழ் பெற்ற மாட்டுச்சந்தையும் நடக்க உள்ளது.

Advertisement