யானை கூட்டத்தால் நெற்பயிர்கள் நாசம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், 20க்கும் மேற்பட்ட யானைகள், 3 குழுக்களாக முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு மேல் ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து, 3 குழுக்களாக, 20க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி, பாவாடரப்பட்டி கிராம விவசாய நிலங்களுக்குள் புகுந்து, ஒரு ஏக்கர் நெல் பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மேல், மீண்டும் ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு திரும்பின.
இதற்கிடையே, ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் தாயை பிரிந்த, 2 வயது ஆண் குட்டி யானை சுற்றித்திரிகிறது. அதை, மற்ற யானைகள், தங்களுடன் சேர்க்காமல் உள்ளன. அதனால், குட்டி யானையின் நடமாட்டத்தை வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
யானை உணவு உட்கொள்வதால், அதை பிடித்து சிகிச்சையளிக்க அவசியமில்லை என, வனத்துறையினர் கூறுகின்றனர். இருந்தாலும், அதன் நடமாட்டத்தை கண்காணிக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலுள்ள குட்டி யானை, தர்மபுரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் யானையின் குட்டியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வனத்துறைக்கு உள்ளது.
மேலும்
-
மனித- வன விலங்கு மோதலில் 80 பேர் உயிரிழப்பு; 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்!
-
ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்
-
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு சாதகம்: நம்ப மறுக்கும் ஆம்ஆத்மி
-
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: முள்ளோடையில் பரபரப்பு
-
காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
-
சிதம்பரம் மருத்துவ கல்லுாரிக்கு 93 டாக்டர்கள் நியமனம்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்