சித்தர் மலை வன பகுதியில் உணவு, தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள்

வெண்ணந்தூர்: சித்தர் மலை வன பகுதியில் வாழும் குரங்குகள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீரின்றி பெரிதும் அவதிப்படுகின்றன.
ஆட்டையாம்பட்டி ராசிபுரம் நெடுஞ்சாலையில் வெண்ணந்தூர் அடுத்த அத்தனுார் அருகே சித்தர் மலை வனப்பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சித்தர் கோவிலில் சுவாமியை வழிபடுகின்றனர்.
இப்பகுதியில் குரங்குகள் அதிகம் உள்ளன. தற்போது கோடை காலம் வருவதற்கு முன்பே உணவு, தண்ணீருக்காக குரங்குகள் அதிகளவு வனப்பகுதியை விட்டு சாலை பகுதிக்கு வருகின்றன.
அவ்வாறு வரும்போது எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் சிக்குகின்றன. குரங்குகள் வனப்பகுதியை விட்டு உணவு, தண்ணீருக்காக வெளியே வராத வகையில் வனத்துறை கவனம் செலுத்தி, குரங்குகளுக்கு உணவு, தண்ணீர் வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement