அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கிய 40 நாற்காலிகள்

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பில், 40 நாற்காலிகள் வழங்கும் விழா, தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது.

இதையொட்டி பேச்சு, கட்டுரை, ஓவியம், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

Advertisement