இடையபட்டி ரோட்டால் இடைஞ்சல்

அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் ஒன்றியம் அழகாபுரி முதல் இடையபட்டி இடையே ஒன்றரை கி.மீ., துார சாலை 13 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

இவ்வழியாக அ.கோவில்பட்டி முதல் அய்யூர், எர்ரம்பட்டி, பாலமேடு வரை அதிக கிராமங்கள் உள்ளன. 8 ஆண்டுகளுக்கு மேலாக ரோடு சேதமடைந்து பயணிக்க தகுதியற்ற நிலையில் கற்கள் பெயர்ந்து காட்சி தருகின்றன. சாலையின் இடையிடையே 'மெகா சைஸ்' பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை விழுந்து காயமடைய செய்கிறது.

புதிய தார் ரோடு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement