மதுக்கடை அகற்ற தீர்மானம்; தீர்வுதான் இல்லை

சோழவந்தான்; மன்னாடிமங்கலம் ஊராட்சியில் உள்ள 2 அரசு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றியும் தீர்வு கிடைக்கவில்லை என கிராமத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.

இங்குள்ள குருவித்துறை ரோட்டில் மன்னாடிமங்கலம் மற்றும் அய்யப்பநாயக்கன்பட்டியில் மதுக்கடைகள் உள்ளன.

இங்கு மது வாங்குபவர்கள் பள்ளி, கோயில் அருகே மற்றும் வைகை ஆற்று பகுதிகளில் மது அருந்துகின்றனர். அப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். இதனால் 2023ல் இருந்து கிராம சபையில் தொடர்ந்து கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். எம்.எல்.ஏ.,வெங்கடேசன் பங்கேற்ற கிராம சபையிலும் பெண்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இன்று வரை நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவித்தனர்.

சரவணன்: மதுக்கடைகளால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. விவசாய நிலங்களில் மது பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். அவை தொழிலாளர்கள், கால்நடைகளை காயப்படுத்துகின்றன. ஒரு கடையையாவது அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement