மாநில வாள் சண்டை போட்டி

மதுரை; பள்ளிக்கல்வித்துறை சார்பில் மயிலாடுதுறை, கிருஷ்ணகிரியில் நடந்த மாநில அளவிலான குடியரசு தின, பாரதியார் தினவிழா குத்துச்சண்டை, வாள் சண்டை போட்டிகளில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றி பெற்றனர்.

14 வயது, 17, 19 வயது வாள்சண்டை போட்டிகளில் மதிமதனி, ஜெயஸ்ரீ, ஸ்ரீஹாசிதா, வேதா தனலட்சுமி, சுசிதா ஆகியோரும் 19 வயது குத்துச்சண்டை போட்டியில் அக் சய ஸ்ரீ வெண்கல பதக்கம் வென்றனர். பள்ளித் தலைவர் செல்லத்துரை, செயலாளர் கிருஷ்ணன், தலைமையாசிரியை இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியை உமா பாராட்டினர்.

Advertisement