குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

வாடிப்பட்டி; பரவை மில் காலனி செந்தில்குமார் 50. உணவு பொருட்கள் ஏஜன்சி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் அதிகரித்தது. தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் மனைவி சுசீலா 36, மகள் கல்லுாரி மாணவி சவுமியா 20, பிளஸ் 1 படிக்கும் மகன் ஆகியோருடன் எலி பேஸ்ட் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மயங்கினர்.

நள்ளிரவு சவுமியா '100'க்கு தகவல் தெரிவித்தார். 4 பேரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சமயநல்லுார் போலீசார் சேர்த்தனர்.

Advertisement