மாநில நீச்சல் போட்டிகள்
மதுரை; விருதுநகரில் செந்திக்குமார நாடார் கல்லுாரி சார்பில் நடந்த 26வது மாநில நீச்சல் போட்டியில் மதுரை அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
குரூப் 1 பிரிவில் வர்ஷினிஸ்ரீ, கிருத்திகா 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் தங்கம் வென்றனர். குரூப் 2 பிரிவில் 200 மீட்டர் ஐ.எம். பிரிவில் சஞ்சீவன் வெண்கலம் வென்றனர். 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் முகமது இக்பால், சிவபாலன், ஸ்ரீவிஷ்ணு, சஞ்சீவன் தங்கப்பதக்கம் வென்றனர். 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் மிருதுளா, லக்கிதா மணி வெண்கல பதக்கம் வென்றனர்.
100 மீட்டர் ப்ரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர் பிளை, 200 மீட்டர் ஐ.எம்., மற்றும் 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவுகளில் பாலதீபிகா தங்கப்பதக்கம், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.
குரூப் 3 பிரிவில் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவுகளில் கேசவன் வெண்கலம் வென்றார். 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் இர்பான் வெள்ளிப்பதக்கம் வென்றார். 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் வீரவேல் தங்கம் வென்றார்.
குரூப் 4 பிரிவில் 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயில் அவந்திகா தங்கப்பதக்கம் வென்றார். குரூப் 6 பிரிவில் 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் மாறவர்ம பாண்டியன் தங்கப்பதக்கம்,100 மீட்டர் ஐ.எம்., 25 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயில் நித்தின் தங்கம் வென்றார். ஹர்ஷிகா 25 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கம், 25 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலம் வென்றார். ரக் ஷிதா 25 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம், 25 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் மற்றும் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவு, 100 மீட்டர் ஐ.எம். பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனியர் பிரிவில் 100 மீட்டர் ப்ரீஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் ஐ.எம்., 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவுகளில் சபிக் ஷா நான்கு தங்கம் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஓபன் பிரிவில் சரபமூர்த்தி 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற நீச்சல் வீரர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நீச்சல் சங்கத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், செயலாளர் கண்ணன், பயிற்சியாளர்கள் விஜயகுமார், பரங்குன்றம் பாராட்டினர்.