ம.பி.,யில் போர் பயிற்சி விமானம் விபத்து: தப்பிய விமானிகள்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் விமானப்படையின் மிராஜ்- 2000 போர் விமானம் விபத்துக்குள்ளானது. விமானிகள் தப்பினர்.

இந்திய விமானப்படையின் இரட்டை இருக்கைகள் கொண்ட மிராஜ் 2000 போர் விமானம் இன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவபுரி அருகே வழக்கமான பயிற்சியில் இருந்தபோது விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
சம்பவம் குறித்து இந்திய விமானப்படை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பயிற்சிப் பயணத்தின் போது, ​​ஒரு கணினி கோளாறு ஏற்பட்டதால், இந்திய விமானப்படையின் மிராஜ்- 2000 விமானம் விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய, இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement