கிம் ஜாங்-உன் கொள்கையில் மாற்றம்: புதிய வடகொரியா வரைபடம் வைரல்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848435.jpg?width=1000&height=625)
பியாங்யாங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங்-உன்னின் கொள்கை மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் வட கொரியா புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1950ம் ஆண்டுகளில் நடந்த கொரியப் போருக்கு பிறகு, கொரியர் தீபகற்பம், வடக்கு மற்றும் தெற்காக பிரிந்துவிட்டது.
கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் வடகொரியாவும், அமெரிக்க ஆதரவு அரசு இருக்கும் தென் கொரியாவும், அவ்வப்போது இணைப்பு தொடர்பாக பேச்சு நடத்துவது வழக்கம்.
ஆனால் இந்த முயற்சிகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை.
வட கொரியா கடந்த காலங்களில் வெளியிட்ட வரைபடம் அனைத்திலும், தென்கொரியாவை, அமெரிக்காவின் கைப்பாவையாக இருக்கும் கொரியா என்றே குறிப்பிட்டு வந்தது.
மேலும், வடகொரியாவுடன் தென்கொரியாவை இணைப்பதையும் லட்சியமாகக் கொண்டிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில்தான், ஒரு புதிய வரைபடத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.
இது அதன் ஒருங்கிணைப்புக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக்
குறிப்பாக புவி அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த வரைபடத்தில், மற்ற நாடுகளைப் போலவே, தென்கொரியாவும் தனி நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரைபடம் சீன சமூக ஊடக தளமான ரெட்நோட்டில் பகிரப்பட்டுள்ளது. நியூஸ்வீக் இதழ் வெளியிட்ட தகவலின் படி இந்த வரைபடம் ஏப்ரல் 2024ல் பகிரப்பட்டுள்ளது.
தென்கொரியாவுடன் இணைப்பு முயற்சிகள் இனி சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வடகொரியா ஆட்சியாளர்கள் வந்துவிட்டதை காட்டுவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
சிட்டி பள்ளி யு - 16 கிரிக்கெட் பி.எஸ்.பி.பி., மில்லினியம் அபாரம்
-
மாநில குத்துச்சண்டை போட்டி சிவந்தி பள்ளி மாணவன் முதலிடம்
-
மாயமான பள்ளி மாணவியரிடம் செங்கை போலீசார் விசாரணை
-
ஆப்பூர் சாலை பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்
-
முட்டுக்காடு மிதவை உணவகம் தனிநபருக்கு ரூ.1,400 கட்டணம்
-
அணுசக்தி துறை டென்னிஸ் துவாரகா 'ஓவரால் சாம்பியன்'