அணுசக்தி துறை டென்னிஸ் துவாரகா 'ஓவரால் சாம்பியன்'

கல்பாக்கம்அணுசக்தி துறையின் கீழ் தமிழகம், கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அணுமின் நிலையம், அணுசக்தி சார்ந்த பிற நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.

இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நாடு முழுதும் உள்ள இத்துறைகளின் அணிகள் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது, 39ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில், புல்வெளி டென்னிஸ் போட்டி, கல்பாக்கம் நெஸ்கோ நிர்வாகம் சார்பில், அணுபுரத்தில் நடத்தப்பட்டது.

நாடு முழுதும் இருந்து எட்டு அணிகளைச் சேர்ந்த ஆண், பெண், முதியோர் என, 72 பேர் பங்கேற்றனர்.

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை, துவாரகா அணி குழுவினர் வென்றனர். அஜந்தா அணி சிறப்பிடம் பெற்றது.

Advertisement