இலங்கை அணி தடுமாற்றம்: ஆஸ்திரேலிய அபார பந்துவீச்சு

காலே: ஆஸ்திரேலிய பவுலர்கள் அசத்த, இலங்கை அணி ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது.

இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. காலேயில் 2வது டெஸ்ட் நடக்கிறது.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணி, துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. லியான் 'சுழலில்' பதும் நிசங்கா (11), திமுத் கருணாரத்னே (36), மாத்யூஸ் (1) சிக்கினர். கமிந்து மெண்டிஸ் (13) நிலைக்கவில்லை. ஸ்டார்க் 'வேகத்தில்' கேப்டன் தனஞ்செயா டி சில்வா (0) வெளியேறினார்.


பொறுப்பாக ஆடிய தினேஷ் சண்டிமால் (74) அரைசதம் கடந்தார். தொடர்ந்து மிரட்டிய ஸ்டார்க் பந்தில் ரமேஷ் மெண்டிஸ் (29), பிரபாத் ஜெயசூர்யா (0) அவுட்டாகினர். மறுமுனையில் அசத்திய குசால் மெண்டிஸ், தன்பங்கிற்கு அரைசதம் கடந்து அணியை மீட்டார்.
முதல் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 229 ரன் எடுத்திருந்தது. குசால் மெண்டிஸ் (59) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், லியான் தலா 3, குனேமன் 2 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement