முருகன் கோவில்களில் தை கிருத்திகை வழிபாடு


முருகன் கோவில்களில் தை கிருத்திகை வழிபாடு


ஊத்தங்கரை,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையிலுள்ள முருகன் கோவில்களில், தை மாத கிருத்திகையை ஒட்டி, அதிகாலை வள்ளி, தெய்வானை உடனுறை, சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் அபிஷேகம் நடந்தது. பின்னர், சந்தன காப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதேபோல், சேலம் மெயின் ரோட்டிலுள்ள முருகன் கோவில், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலுள்ள முருகனுக்கு, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


Advertisement