5.73 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக, எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, திருவள்ளூர் தாலுகால எஸ்.ஐ., கோபிகிருஷ்ணன் மற்றும் போலீசார், திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் பட்டரைபெரும்புதுார் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, திருத்ததணியிலிருந்து, திருவள்ளூர் நோக்கி வந்த, 'எய்ச்சர்' சரக்கு லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 17,250 ஹான்ஸ், 2,200 கூல் லிப், 120 ஸ்வாகத், 62,400 விமல், 62,400 வி.1., 9,600 ரெமோ, 5,760 ஆர்.எம்.டி., மிக்ஸ்டு 10 என மொத்தம் 1 லட்சத்து 59,740 போதைப்பாக்குகளை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரிலிருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனைக்கு கொண்ட வரப்பட்ட 790 கிலோ எடை கொண்ட இதன் மதிப்பு 5 லட்சத்து 73,200 ரூபாய் என, தாலுகா போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார, 'எய்ச்சர்' லாரியை பறிமுதல் செய்து, பெங்களூர் பகுதியைச் சேர்ந்த அப்ரர் அகம்மது, 37 மற்றும் லாரி ஓட்டுநுர் சென்னை கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், 35, ஆகிய இருவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மப்பேடு



மப்பேடு பஜார் பகுதியில் போதைப்பாக்குகளை விற்பனைக்கு வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், 55, என்பவரை, மப்பேடு போலீசார் கைது செய்தார். அவரிடமிருந்து 90 ஹான்ஸ், 8 கூல் லிப், 350 வி.1., 380 விமல் என மொத்தம் 828 போதைப்பாக்குகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement