சித்தப்பனுாரில் ஆழ்துளை கிணறு செறிவூட்டும் கட்டமைப்பு அம்போ?

ஆர்.கே.பேட்டை:நிலத்தடி நீர்மட்டம் வற்றிய ஆழ்துளை கிணறுகளில், அவற்றை செறிவூட்டும் விதமாக அவற்றையொட்டி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இதில், மழைநீரை வடிகட்டி நிலத்தடிக்கு கொண்டு செல்லும் விதமாக ஜல்லிகற்கள், மணல் என, பல்வேறு நிலைகளில் வடிகட்டும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டமைப்பில், குப்பையை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அப்படி சுத்தம் செய்தால் மட்டுமே, மழைநீர் எளிதாக நிலத்தடியை சென்றடைய முடியும். அதுவே இந்த திட்டத்தின் நோக்கம்.

ஆனால், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டுள்ளன.

மயிலாடும் பாறை அடுத்த, சித்தப்பனுரில் உள்ள ஆழ்துளை கிணறு செறிவூட்டும் கட்டமைப்பில், செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், மழைநீரை முழுதுமாக நிலத்தடிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement