மழை நீர் சேமிப்பு தொட்டிஅமைக்கும் பணி தீவிரம்
மழை நீர் சேமிப்பு தொட்டிஅமைக்கும் பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, குழந்தைப்பட்டி, வேங்காம்பட்டி ஆகிய கிராமங்களில் மழை நீர் செல்லும் வழித்தடங்களில், சேமிப்பு தொட்டிகள் அமைக்கும் பணி
தீவிரமாக நடந்தது. இதில், மழை காலங்களில் சாலை வழியாக வரும் மழை நீர், மழை நீர் சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரால், விளை நிலங்களில் உள்ள கிணறு களில் நீர் மட்டம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் சாகுபடி பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. மேலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தப்படுவதால், கோடை காலத்தில் பாதிப்பு இன்றி தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement