அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
சேலம்: சேலம், குரங்குச்சாவடியில் உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலுடன், ஜாகீர் அம்மாபாளையம் மாரியம்மன் கோவி-லுக்கும் தை திருவிழா நடக்கிறது. இரண்டாம் நாளான நேற்று, முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மாரியம்மன் கோவில் வேண்டிக்கொண்ட பக்தர்கள், வெண்ணங்கொடி முனி-யப்பன் கோவிலுக்கு வந்தனர். அங்கு வேண்டுதல் நிறைவேற்றி தந்த மாரியம்மனுக்கு, முனியப்பன் முன்னிலையில் உடலில் அலகு குத்தும் வைபவம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள், பட்டா கத்தி, சூலம், வேல், உள்ளிட்ட-வற்றை கொண்டு முகம், உடல்களில் அலகு குத்திக்கொண்டனர். விமான அலகு உள்ளிட்ட பல்வேறு வாகன அலகு குத்தும் வைப-வமும் நடந்தது. இதையடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவி-லுக்கு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்-டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.யானை வாகனத்தில் உலா
அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தைப்பூச தேர்த்-திருவிழா
வின், 4 நாளான நேற்று, புலிக்குத்தி சாவடிக்கு, சுவாமியை அழைத்து வந்தனர். மாலையில் சுவாமிக்கு வாசனை திரவியங்-களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இரவு, சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி சுவாமி சிறப்பு அலங்காரத்தில், யானை வாகனத்தில் எழுந்தருளச்செய்து, முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலா நடந்து கோவிலில் நிறைவு செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.