தைப்பூசம், பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
சேலம்: வரும், 11ல் தைப்பூசம், 12ல் பவுர்ணமியை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நாளை முதல் வரும், 13 வரை, 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூர்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு, சிதம்பரம், காஞ்சிபுரம்; ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கடலுாருக்கு பஸ்கள் இயக்கப்படும். நாமக்-கல்லில் இருந்து சென்னை; திருச்சியில் இருந்து ஓசூர்; பெங்க-ளூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை; ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படும்.வரும், 11 மதியம், 2:00 முதல், 12 மதியம், 2:00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் புறநகர், தர்மபுரி, ஓசூர் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து திரு-வண்ணாமலைக்கு பஸ்கள் இயக்கப்படும். மேலும் காளிப்பட்-டியில் இருந்து சேலம், ராசிபுரம், இடைப்பாடி, சங்ககிரி, திருச்-செங்கோடு, தாரமங்கலம், கபிலர்மலையில் இருந்து நாமக்கல், பரமத்தி வேலுார், திருச்செங்கோடு, இடைப்பாடியில் இருந்து பழநி, சேலத்தில் இருந்து வடலுாருக்கு பஸ்கள் இயக்க உத்தே-சிக்கப்பட்டுள்ளதாக, நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரி-வித்தார்.